/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி வளர்ச்சி திட்டப் பணிகள்: கலெக்டர் பிரசாந்த் ஆய்வு
/
கள்ளக்குறிச்சி வளர்ச்சி திட்டப் பணிகள்: கலெக்டர் பிரசாந்த் ஆய்வு
கள்ளக்குறிச்சி வளர்ச்சி திட்டப் பணிகள்: கலெக்டர் பிரசாந்த் ஆய்வு
கள்ளக்குறிச்சி வளர்ச்சி திட்டப் பணிகள்: கலெக்டர் பிரசாந்த் ஆய்வு
ADDED : செப் 05, 2024 06:53 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் பிரசாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி ஒன்றியம் தென்கீரனூர் ஊராட்சி மன்ற அலுவலகம் பார்வையிடப்பட்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பதிவேடுகள் உள்ளிட்ட பிற பதிவேடுகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டு அனைத்து பதிவேடுகளையும் முறையாக பராமரிக்க அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, மகளிர் திட்டத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நெகிழி கழிவு அறவை இயந்திரத்தின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டு, நெகிழி கழிவுகளை குறிப்பிட்ட அளவுகளில் மறு சுழற்சி செய்யும் வகையில் சரியான முறையில் அரவை மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.
கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமானப் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்து, கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு கட்டப் பணி ஆணை பெற்றவர்கள் உடனடியாக வீடு கட்டும் பணிகளை துவங்கவும் அறிவுறுத்தினார்.
மேலும், தென்கீரனுார் மகளிர் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் மர சிற்பக் கலை உற்பத்தியாளர் சுய உதவிக் குழு மூலம் உருவாக்கப்பட்டு வரும் மர சிற்ப கைவினைப் பொருட்கள் மற்றும் சிலைகள் பார்வையிட்டு ஆய்வு செய்து, கைவினைப் பொருட்களுக்கான நிரந்தர விற்பனை சந்தையினை ஏற்படுத்துவது குறித்தும் உரிய ஆலோசனை வழங்கினார்.
தொடர்ந்து, 15வது நிதி குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.54.73 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார கட்டட கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, தரமான கட்டுமானப் பொருட்களை கொண்டு கட்டி முடித்து பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் பிரசாந்த் தெரிவித்தார். ஆய்வின்போது துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.