/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கராபுரத்தில் கருகுது பயிர்
/
சங்கராபுரத்தில் கருகுது பயிர்
ADDED : மே 06, 2024 03:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. ஆறு, ஏரி, கிணற்று பாசனங்கள் என 3 போக சாகுபடியை விவசாயிகள் செய்து வந்தனர்.
கடந்த ஆண்டு சங்கராபுரம் பகுதியில் போதிய மழை இல்லாததால் பாதியளவே நிரம்பியிருந்த ஏரிகள் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வெயில் காரணமாக வறண்டன.
சங்கராபுரம் தாலுகாவில் பூட்டை, ஊராங்கானி, பாண்டலம், சிட்டந்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்களில் 500 ஏக்கர் வரை தண்ணீறின்றி காய்ந்து கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.