/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கேரள ஆசாமி கைது 30 கிலோ கஞ்சா பறிமுதல்
/
கேரள ஆசாமி கைது 30 கிலோ கஞ்சா பறிமுதல்
ADDED : மார் 02, 2025 06:42 AM
உளுந்துார்பேட்டை: திருநாவலுார் அருகே, கேரளா கஞ்சா வியாபாரியை கைது செய்த போலீசார், 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
உளுந்துார்பேட்டை தாலுகா கூ. நத்தம் கிராமத்தில் கஞ்சா விற்பனைக்காக வந்த, 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து இருந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய கேரள மாநிலம் கொல்லம் அடுத்த புன்னவள வீடு பகுதியைச் சேர்ந்த பிரேம், 45; என்பவரை திருநாவலூர் போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் பிரேம் ஆரியநத்தம் காப்பு காட்டுப்பகுதியில் தலைமறைவாக இருப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் அங்கு சென்று, பிரேமை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிந்து, 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.