ADDED : ஆக 13, 2024 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: மணலுார்பேட்டை அருகே மதுபாட்டில்கள் கடத்திய முதியவரை போலீசார் கைது செய்தனர்.
மணலுார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் நேற்று பிற்பகல் 2:00 மணியளவில் பஸ் நிலைய பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேககப்படும்படி பதிவெண் இல்லாத டி.வி.எஸ்., மொபட்டில் வந்தவரை நிறுத்தி விசாரித்தனர்.
அதில், அவர் மணலுார்பேட்டையைச் சேர்ந்த பச்சையப்பன், 65; என்பதும், திருவண்ணாமலை மாவட்டம், வேலையாம்பாக்கம் டாஸ்மாக் கடையிலிருந்து 15 குவார்ட்டர் மதுபாட்டில்களை விற்பனை செய்வதற்காக கடத்திச் செல்வதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், மது பாட்டில்களை பறிமுதல் செய்து, பச்சையப்பனை கைது செய்தனர்.

