/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நல்லாசிரியர் விருது பெற்ற வ ருக்கு பாராட்டு
/
நல்லாசிரியர் விருது பெற்ற வ ருக்கு பாராட்டு
ADDED : செப் 08, 2024 06:49 AM

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா நடந்தது.
சங்கராபுரம் அடுத்த எஸ்.வி.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை தமிழாசிரியராக பணியாற்றி வருபவர் இளையராஜா. இவருக்கு இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாரிசிரியர் விருது கடந்த 5ம் தேதி சென்னையில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஊர் மக்கள் சார்பில் ஆசிரியர் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடந்தது.
பள்ளியில் நடந்த விழாவிற்கு, ஊராட்சி துணைத் தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் முல்லைமணி வரவேற்றார். ஆசிரியர் இளையராஜாவின் தந்தை மாணிக்கம் முன்னிலை வகித்தார். நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியரை பாராட்டி ஆசிரியர்கள் வாழ்த்தி பேசினர்.
தொடர்ந்து ஏற்புரையாற்றிய ஆசிரியர் இளையராஜா விருதுடன் தனக்கு வழங்கப்பட்ட 10 ஆயிரம் ரூபாயை பள்ளி நுாலக பராமரிப்பிற்கு பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.