/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கேட் கரு மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா
/
கேட் கரு மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா
ADDED : மே 20, 2024 06:51 AM

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அடுத்த அம்மையகரம் கிராம எல்லையில் உள்ள கேட் கரு மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா கடந்த 17ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், முளைப்பாரி எடுத்தல், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், 18-ம் தேதி நிலத்தேவர் வழிபாடு, சக்தி அழைத்தல், புற்று மண் எடுத்தல், காப்பு கட்டுதல், கலசங்கள் யாகசாலையில் நிறுவுதல், கலச புஷ்ப அர்ச்சனை, முதல் கால யாக பூஜை நிகழ்ச்சிகளும் நடந்தன. நேற்று காலை வேதபாராயணம், கோ பூஜை, பரிவார தேவதைகள் கண் திறத்தல், இறைவனுக்கு உயிர் கலை இடுதல், கலச வேதிகை பூஜை, இரண்டாம் கால பூஜை, தச தானங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.
தொடர்ந்து, காலை 9.-15 மணியளவில் கேட் மாரியம்மன், விநாயகர், பாலமுருகன், ஹயக்ரீவர் மற்றும் கருப்பனார் சுவாமிகளை உள்ளடக்கிய கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் செய்யப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

