/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிவன், பெருமாள் சுவாமிகள் ஒரே தேரில் ஊர்வலம்
/
சிவன், பெருமாள் சுவாமிகள் ஒரே தேரில் ஊர்வலம்
ADDED : ஏப் 24, 2024 03:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம், : ராயப்பனுார் கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு சிவன், பெருமாள் சுவாமிகள் ஒரே தேரில் ஊர்வலமாக வந்தனர்.
சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டாக பல நுாறு ஆண்டுகளுக்கு முன் பாளையக்காரர்கள் காலத்தில் இருந்து இந்த ஊரில் சிவன், பெருமாள் இருவரும் ஒரே தேரில் பவனி வருவது வழக்கம்.
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பாளையக்காரர்கள், மணியக்காரர்கள், தர்மகர்த்தாக்கள், ஊர் பொதுமக்கள் முன்னிலையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சிவன், பெருமாள் சுவாமிகள் ஒரே தேரில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டனர்.
ஸ்ரீதர் குருக்கள் தலைமையில் தேரோட்டம் நடைபெற்றது. கிராம மக்கள் சுவாமிகளை தரிசனம் செய்தனர்.

