/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது
/
அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது
ADDED : மார் 04, 2025 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம்: தியாகதுருகத்தில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த குடுமியான்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாசலம் மகன் அரசப்பன், 57; அரசு பஸ் டிரைவர். இவர், உளுந்துார்பேட்டை டெப்போவில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2ம் தேதி தடம் எண்.238சி பஸ்சை கடலுாரிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு ஓட்டிச் சென்றார். தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே பஸ்சை நிறுத்தியபோது, அதே பகுதியைச் சேர்ந்த பிரபு, 43; என்பவர் தேங்காயால் பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார்.
இதுகுறித்து அரசப்பன் கொடுத்த புகாரின்பேரில், தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து பிரபுவை கைது செய்தனர்.