/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாராயம் காய்ச்ச வெல்லம் பதுக்கியவர் கைது
/
சாராயம் காய்ச்ச வெல்லம் பதுக்கியவர் கைது
ADDED : மார் 07, 2025 07:15 AM
கச்சிராயபாளையம் : கல்வராயன்மலையில் சாராயம் காய்ச்ச, 350 கிலோ வெல்லம் பதுக்கியவரை, போலீசார் கைது செய்தனர்.
கரியாலுார் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கல்வராயன் மலையில், கொட்டாவளவு, கள்ளிப்பாறை, கிளாக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கள்ளிப்பாறை கிராமத்தைச் சேர்ந்த பூஞ்சோலை மகன் மயில்சாமி,35; என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கொட்டகையில் தலா 50 கிலோ எடை கொண்ட, 7 சாக்கு பைகளில் 350 கிலோ வெல்லம், சாராயம் காய்ச்ச பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.
மேலும் பிளாஸ்டிக் கவர்களில், 14 லிட்டர் சாராயம் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.
தொடர்ந்து மயில்சாமியை கைது செய்த போலீசார், வெல்லம் மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.