/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மத்திய அரசை கண்டித்து ம.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
மத்திய அரசை கண்டித்து ம.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 15, 2024 05:57 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ம.தி.மு.க., சார்பில் மத்திய பா.ஜ., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் தலைமை தாங்கி பேசினார். அவை தலைவர் சீனுவாசன், பொருளாளர் சவுகத் அலி, ஒன்றிய செயலாளர் அருள், மாவட்ட நிர்வாகிகள் சீனுவாசன், புகழேந்தி, முனீர்கான், விக்ரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமை கழக பேச்சாளர் சேகர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், மாதவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில் மத்திய பட்ஜெட்டில் உரிய நிதி ஒதுக்கீடு செய்யாமல் தமிழ்நாட்டை புறக்கணித்ததை கண்டித்தும், நீட் தேர்வு ரத்து செய்ய கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் பொதுக்குழு உறுப்பினர் சரண்ராஜ், மாவட்ட அணி அமைப்பாளர்கள் சிவக்குமார், விஸ்வநாதன், கணபதி அன்னமதேவி, சந்தோஷ் வெங்கடேசன், பழனியம்மாள் மற்றும் ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். நகர செயலாளர் வேலு நன்றி கூறினார்.