/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 25 வழித்தடங்களில் மினி பஸ்
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 25 வழித்தடங்களில் மினி பஸ்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 25 வழித்தடங்களில் மினி பஸ்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 25 வழித்தடங்களில் மினி பஸ்
ADDED : மார் 09, 2025 05:36 AM
கள்ளக்குறிச்சி : மாவட்டத்தில், 25 வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்க விரைவில் அனுமதி வழங்கப்பட உள்ளது.
மாவட்டத்தில் புதிய மினி பஸ் இயக்க, பஸ் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், உளுந்துார்பேட்டையில் 15 வழித்தடங்களில் 44 பேரும், கள்ளக்குறிச்சியில் 17 வழித்தடங்களுக்கு 18 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.
அதனையொட்டி, கலெக்டர் பிரசாந்த் தலைமையில், குலுக்கல் முறையில் 25 வழித்தடங்களுக்கு உரிமையாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த மினி பஸ்களை இயக்குவதற்கான அனுமதி செயல்முறை ஆணைகள் விரைவில் வழங்கப்பட உள்ளதாக, கலெக்டர் தெரிவித்தார்.
கூட்டத்தில், வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், மினி பஸ் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.