/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
3 புதிய அரசு பஸ்கள் இயக்கம் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்
/
3 புதிய அரசு பஸ்கள் இயக்கம் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்
3 புதிய அரசு பஸ்கள் இயக்கம் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்
3 புதிய அரசு பஸ்கள் இயக்கம் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்
ADDED : ஆக 12, 2024 06:40 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் இருந்து புதிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்கும் விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து, 2 நகர பஸ்கள், ஒரு வெளியூர் பஸ் என 3 புதிய பஸ்களின் இயக்க துவக்க விழா, நேற்று நடந்தது. தடம் எண். 177 கிளாம்பாக்கம், 12பி-அடரி, 31-தாவடிப்பட்டு பகுதிகளுக்கான புதிய பஸ்களின் சேவையை ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன், தலைமை தாங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மாவட்ட சேர்மன் புனவேஸ்வரி பெருமாள் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் சுப்ராயலு வரவேற்றார்.
நிகழ்ச்சியில், அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர்கள் சிவசங்கரன், சிவக்குமார், தி.மு.க., மாவட்ட அவை தலைவர் ராமமூர்த்தி, ஒன்றிய சேர்மன்கள் சத்தியமூர்த்தி, தாமோதரன், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, தாமோதரன், கனகராஜ், பேரூராட்சி சேர்மன் வீராசாமி, மாவட்ட பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.