/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரிஷிவந்தியம் பேரூராட்சி எம்.எல்.ஏ., உறுதி
/
ரிஷிவந்தியம் பேரூராட்சி எம்.எல்.ஏ., உறுதி
ADDED : ஆக 28, 2024 04:20 AM

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.
ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன் தலைமை தாங்கினார். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், தாசில்தார் பாலகுரு, பி.டி.ஓ.,க்கள் சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர். நடராஜன் வரவேற்றார்.
வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று பேசியதாவது:
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில், ரிஷிவந்தியத்தில் கழிவுநீர் கால்வாய், சாலை வசதி, கோவில்கள் பராமரிப்பு என பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க., ஆட்சி காலத்தை ஒப்பிடுகையில், ரிஷிவந்தியத்தில் இரண்டு மடங்கு பணிகள் அதிகமாக நடந்துள்ளது.
இந்த ஊரை சேர்ந்தவர்கள் மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டால் ரிஷிவந்தியத்தை பேரூராட்சியாக தரம் உயர்த்த தேவையான நடவடிக்கை எடுப்போம். ரிஷிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியத்தை அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது' என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலர் கோவிந்தராஜி, தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் ராஜி, ஊராட்சி தலைவர்கள் வினிதா மகேந்திரன், கிருஷ்ணபிரசாத், ராமமூர்த்தி, நிர்வாகிகள் சிவமுருகன், செல்வகுமார், இதயதுல்லா, ஷாயின்ஷா உட்பட பலர் பங்கேற்றனர்.