/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுாரில் 39 மி.மீ., மழை பதிவு
/
திருக்கோவிலுாரில் 39 மி.மீ., மழை பதிவு
ADDED : அக் 15, 2025 11:20 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக திருக்கோவிலுாரில் 39 மி.மீ., மழை பெய்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி கள்ளக்குறிச்சியில் 1 மி.மீ., அளவும், விருகாவூர் 8, கச்சிராயபாளையம் 3, கோமுகி அணை 15, மூரார்பாளையம் 1, வடசிறுவள்ளூர் 2, கடுவனுார் 6, மூங்கில்துறைப்பட்டு 5, சூளாங்குறிச்சி 8, ரிஷிவந்தியம் 13, கீழ்பாடி 3, கலையநல்லுார் 10, மணலுார்பேட்டை 6, மணிமுக்தா அணை 8, மாடாம்பூண்டி 17, திருக்கோவிலுார் (வடக்கு) 39, திருப்பாலபந்தல் 20, வேங்கூர் 11, பிள்ளையார்குப்பம் 2, உ.கீரனுார் 1 என மாவட்டம் முழுவதும் 189 மி.மீ., மழை அளவு பெய்தது. சராசரி மழை அளவாக 7.88 மி.மீ., பதிவானது.
இதில் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருக்கோவிலுார் பகுதியில் 39 மி.மீ., மழை பெய்துள்ளது.