/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆசிரியர் வீட்டில் 70 சவரன் மர்ம நபர்களால் கொள்ளை
/
ஆசிரியர் வீட்டில் 70 சவரன் மர்ம நபர்களால் கொள்ளை
ADDED : அக் 16, 2025 02:06 AM
தியாகதுருகம்: அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில், 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 70 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் தாய் நகரை சேர்ந்தவர் நடனசபாபதி, 57, பீளமேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவரது மனைவி வடிவு, 55, கீழத்தேனுார் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர்.
இந்த தம்பதியின் மகள் ஜனனி, சின்னசேலம் அருகே தனியார் கல்லுாரியில் உதவி பேராசிரியராக உள்ளார். மூவரும் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி, வேலைக்கு சென்று விட்டனர்.
மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் மாடி கதவு பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, மாடி கதவு வழியாக வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 70 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரிந்தது.
இதுகுறித்து தியாதுருகம் போலீசில் நடனசபாபதி புகார் அளித்தார். திருடு போன நகைகளின் மதிப்பு 70 லட்சம் ரூபாய். தியாகதுருகம் போலீசார், நகைகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.