/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வெளிநாட்டில் சிறையில் தவிக்கும் மகனை மீட்ககோரி தாய் மனு
/
வெளிநாட்டில் சிறையில் தவிக்கும் மகனை மீட்ககோரி தாய் மனு
வெளிநாட்டில் சிறையில் தவிக்கும் மகனை மீட்ககோரி தாய் மனு
வெளிநாட்டில் சிறையில் தவிக்கும் மகனை மீட்ககோரி தாய் மனு
ADDED : மார் 04, 2025 07:26 AM

கள்ளக்குறிச்சி: வெளிநாட்டில் பொய் வழக்கில் சிறையில் இருக்கும் மகனை மீட்கக் கோரி கலெக்டர் அலுவலகத்தில், தாய் கோரிக்கை மனு அளித்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த பிரதிவிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினவேல் மனைவி சரஸ்வதி தனது குடும்பத்தினருடன் அளித்த மனு:
எனது கணவர் ரத்தினவேல், 45; மகன் சதிஷ், 23; ஆகியோர் கடந்த ஓராண்டுக்கு முன் மாலத்தீவுக்கு தனியார் நிறுவனத்தில் கட்டட வேலைக்குச் சென்றனர். அங்கு எனது மகன் சதிைஷ போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனால், கணவர் ரத்தினவேல் செய்வதறியால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனையடுத்து தமிழக முதல்வருக்கு மனு அளித்ததைத் தொடர்ந்து எனது கணவர் ரத்தினவேலை மீட்டு வந்தேன். மேலும், மகனையும் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தேன்.
தொடர்ந்து அந்நாட்டில் வழக்கறிஞர் ஒருவர் ஏற்பாடு செய்து மகனை மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டேன். இருப்பினும் முடியவில்லை. தற்போது எனது மகனின் விபரம் குறித்து எதுவும் தெரியவில்லை.
எனவே, பொய் வழக்கில் சிறையில் உள்ள எனது மகனை மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.