/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முத்துமாரியம்மன் கோவில் பூப்போடுதல் நிகழ்ச்சி
/
முத்துமாரியம்மன் கோவில் பூப்போடுதல் நிகழ்ச்சி
ADDED : ஜூலை 07, 2024 04:24 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் முத்துமாரியம்மன் கோவில் தேர்திருவிழாவையொட்டி கொடிமரத்திற்கு பூப்போடுதல் நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி மந்தைவெளி பகுதியில் பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தேர்திருவிழா விக்னேஸ்வர பூஜையுடன் நேற்று முன்தினம் தொடங்கியது.
நிகழ்ச்சியையொட்டி மூலவர் முத்துமாரியம்மன் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகமும், புண்ணியாஹவாஜனம், கணபதி ேஹாமம், பூர்ணாஹூதி நிகழ்ச்சிகளும் நடந்தது.
தொடர்ந்து, மாலை நடந்த பூப்போடுதல் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தின் மீது பூக்களை துாவினர்.
தொடர்ந்து, பரசுராமர் பிறப்பு, மாரியம்மன் பிறப்பு, காப்பு கட்டுதல், சுவாமி வீதியுலா என 17 நாட்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும் 24ம் தேதி தேர்திருவிழா நடக்கிறது.