/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உரிய ஆவணம் இல்லை ரூ.57 ஆயிரம் பறிமுதல்
/
உரிய ஆவணம் இல்லை ரூ.57 ஆயிரம் பறிமுதல்
ADDED : மார் 24, 2024 04:57 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், லோக்சபா தேர்தலையொட்டி பறக்கும் படை குழுவினர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பரிசு பொருட்களை தடுக்கும் பொருட்டு பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பறக்கும் படை அலுவலர் ஜெகநாதன் தலைமையிலான குழுவினர் நேற்று காலை 10.15 மணியளவில் விருகாவூர் - பொரசக்குறிச்சி சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த கணங்கூர் காலனியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணம் இன்றி 57 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்து சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை குழுவினர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

