/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
லாரி டிரைவரிடம் மொபைல் போன் திருடிய வடமாநில வாலிபர் கைது
/
லாரி டிரைவரிடம் மொபைல் போன் திருடிய வடமாநில வாலிபர் கைது
லாரி டிரைவரிடம் மொபைல் போன் திருடிய வடமாநில வாலிபர் கைது
லாரி டிரைவரிடம் மொபைல் போன் திருடிய வடமாநில வாலிபர் கைது
ADDED : செப் 05, 2024 07:37 PM

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் லாரி டிரைவரிடம் மொபைல் போனை திருடிய வடமாநிலத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த அரியபெருமானுாரைச் சேர்ந்தவர் முருகன்,53; லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வற்காக கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் பஸ் சுக்காக காத்திருந்தார்.
அப்போது, அவரது பாக்கெட்டிலிருந்து வாலிபர் ஒருவர் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மொபைல் போனை திருடி தப்பியோடினார். உடன் பொதுமக்கள் உதவியுடன் அவரை பிடித்து கள்ளக்குறிச்சி போலீசில் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில் ஒடிசா மாநிலம் நிஜாபூர் மாவட்டம் புர்கோட் சேர்ந்த மைக்கேல் துர்கா ராவ் மகன் மைக்கேல் பிரேம்நாத் ராவ், 21; என்பது தெரிந்தது.
முருகன் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து பிரேம்நாத்ராவை கைது செய்தனர்.