sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

/

லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


ADDED : ஜூன் 02, 2024 05:32 AM

Google News

ADDED : ஜூன் 02, 2024 05:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: திருநாவலுார் அருகே ஆம்னி பஸ், லாரி மீது மோதிய விபத்தில் பஸ் டிரைவர் உட்பட 3 பேர் காயமடைந்தனர். 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

சென்னை, கோயம்பேட்டில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு ராமநாதபுரம் நோக்கி தனியார் ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. அதிகாலை 2:30 மணியளவில் உளுந்துார் பேட்டை அடுத்த கெடிலம் அருகே சென்ற போது முன்னாள் சென்ற லாரியை முந்த முயன்ற போது லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஆம்னி பஸ்சை ஓட்டிச் சென்ற ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன், 45; இரு கால்களும் சிக்கி உயிருக்கு போராடினார்.

தகவல் அறிந்த உளுந்துார்பேட்டை தீயணைப்புத்துறை மற்றும் திருநாவலுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று டிரைவரை ஒரு மணி நேரம் போராடி மீட்டனர். பஸ்சில் பயணித்த அறந்தாங்கியைச் சேர்ந்த பாரதிராஜா, 47; சென்னையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், 55; ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினர்.

காயயமடைந்த 3 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்த விபத்தால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இதனால், வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி விட்டனர்.

திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us