/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சவுண்ட் சர்வீஸ் கடை உரிமையாளரை தாக்கிய வழக்கில் ஒருவர் கைது
/
சவுண்ட் சர்வீஸ் கடை உரிமையாளரை தாக்கிய வழக்கில் ஒருவர் கைது
சவுண்ட் சர்வீஸ் கடை உரிமையாளரை தாக்கிய வழக்கில் ஒருவர் கைது
சவுண்ட் சர்வீஸ் கடை உரிமையாளரை தாக்கிய வழக்கில் ஒருவர் கைது
ADDED : மார் 04, 2025 09:36 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த கூத்தக்குடியைச் சேர்ந்தவர் சசிகுமார், 45; இவர், அப்பகுதியில் சவுண்ட் சர்வீஸ் மற்றும் பந்தல் அமைப்பு கடை வைத்துள்ளார். கடந்த 2ம் தேதி இரவு 11:00 மணிக்கு கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த அதியூர் காலனி சேர்ந்த அண்ணாமலை, 57; அவரது மகன் இளஞ்செழியன் ஆகியோர் பந்தல் பொருட்கள் எடுப்பதற்கு வந்துள்ளனர்.
அப்போது சசிகுமார், காலையில் வந்து பொருட்களை எடுத்துக் கொள்ளும்படி கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது
மறுநாள் 3ம் தேதி அதிகாலை 2:00 மணிக்கு அண்ணாமலை, இளஞ்செழியன் ஆகியோர் சில ஆட்களுடன் வந்து சசிகுமார், அவரது உறவினர் முத்துசாமி ஆகியோரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து முத்துசாமி, 40; கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலை, இளஞ்செழியன் மற்றும் சிலர் மீது வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து அண்ணாமலையை கைது செய்தனர்.