/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஓய்வூதியர்கள் சங்க பேரவைக் கூட்டம்
/
ஓய்வூதியர்கள் சங்க பேரவைக் கூட்டம்
ADDED : ஜூலை 22, 2024 07:50 PM
திருக்கோவிலுார் : தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க கண்டாச்சிபுரம் வட்ட பேரவைக் கூட்டம் மணம்பூண்டியில் நடந்தது.
வட்டத் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் ராமநாதன், தணிக்கையாளர் மாணிக்கம் முன்னிலை வகித்தனர். இணைச் செயலாளர் தேன்மொழி வரவேற்றார்.
துணைத் தலைவர் தர்மலிங்கம், செயலாளர் குணசேகரன், மாவட்ட செயலாளர் அய்யாக்கண்ணு, முன்னாள் மாநில பொருளாளர் அன்பு நிலவன், மாவட்ட இணைச் செயலாளர் மோகன், திருக்கோவிலுார் வட்ட தலைவர் ராமமூர்த்தி உட்பட பலர் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முன்னாள் மாவட்ட தலைவர் சரவணன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் 7,850 வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை காசில்லா திட்டமாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.