/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மோடியின் முழு படத்தை பார்க்க தமிழக மக்கள் தயாராக இல்லை அமைச்சர் வேலு பேச்சு
/
மோடியின் முழு படத்தை பார்க்க தமிழக மக்கள் தயாராக இல்லை அமைச்சர் வேலு பேச்சு
மோடியின் முழு படத்தை பார்க்க தமிழக மக்கள் தயாராக இல்லை அமைச்சர் வேலு பேச்சு
மோடியின் முழு படத்தை பார்க்க தமிழக மக்கள் தயாராக இல்லை அமைச்சர் வேலு பேச்சு
ADDED : மார் 25, 2024 06:07 AM

கள்ளக்குறிச்சி: 'கள்ளக்குறிச்சியில் பிரதமர் மோடியின் முழு படத்தை பார்க்க தமிழக மக்கள் தயாராக இல்லை' என அமைச்சர் வேலு பேசினார்.
கள்ளக்குறிச்சியில் தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் வேலு பேசியதாவது:
ஒரு காலத்தில் தொழிலதிபர், நிலக்கிழார், பண்ணையத்தார், பைனான்சியர் என்று சொல்லி வேட்பாளரை அடையாளபடுத்துவார்கள். ஆனால், 6 சட்டசபை தொகுதியை உள்ளடக்கிய கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் சாதாரண தொண்டனை நிறுத்தும் பாங்கு தி.மு.க., விற்கு மட்டும்தான் உள்ளது.
இது ஜனநாயகத்திற்கும், பணநாயகத்திற்கும் நடைபெறும் தேர்தல். தி.மு.க.,வை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் மக்களை நம்பவில்லை. பணத்தை நம்பி இருக்கிறார்கள். தி.மு.க., தொண்டர்கள் யாராவது ஏமாறுவார்களா என்று வேவு பார்க்கிறார்கள்.
எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். எல்லாம் சமம் என நினைப்பது தான் தி.மு.க., ஆட்சியின் கொள்கை. ஆனால், எதிர்த்து நிற்பவர்கள் மனுநீதியை பூசிக்கொள்பவர்கள். ஜாதி பாகுபாடு பார்ப்பவர்கள்.
கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் 'டிரைலர்'தான் ஓட்டி இருக்கிறேன் என பிரதமர் மோடி கூறுகிறார். கடந்த 10 ஆண்டுகளில் அரிசி, துவரம் பருப்பு, பெட்ரோல், சமையல் எண்ணெய், சமையல் கேஸ் என அனைத்து விலைவாசியும் உயர்ந்து விட்டது. டிரைலருக்கே இவ்வளவு சுமை என்றால், உங்களது முழு படத்தையும் பார்த்தால் என்ன ஆகும்.
முழு படத்தையும் பார்க்க தமிழக மக்கள் தயாராக இல்லை.
இவ்வாறு அமைச்சர் வேலு பேசினார்.

