sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் மக்கள் மறியல்

/

ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் மக்கள் மறியல்

ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் மக்கள் மறியல்

ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் மக்கள் மறியல்


ADDED : ஏப் 22, 2024 06:26 AM

Google News

ADDED : ஏப் 22, 2024 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே குடிநீர் பிரச்னையை தீர்க்காத ஊராட்சி நிர்வாகத்தின் போக்கை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த கூ.கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் பிரச்னை தொடர்கிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆவேசம் அடைந்த கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் குடிநீர் பிரச்னையை தீர்க்காத ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் போக்கை கண்டித்து நேற்று காலை 8:15 மணியளவில் உளுந்துார்பேட்டை - சேர்ந்தநாடு சாலையில் காலி குடங்களுடன் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த திருநாவலுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, குடிநீர் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து 8:40 மணியளவில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us