/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி மாவட்டம் வளர்ச்சி பெற மக்கள் சிந்தித்து ஓட்டளிக்க வேண்டும்: அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு கோரிக்கை

ADDED : ஏப் 17, 2024 11:32 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் வளர்ச்சி பெற அ.தி.மு.க.,வுக்கு மக்கள் சிந்தித்து ஓட்டளிக்க வேண்டும் என்று வேட்பாளர் குமரகுரு கோரிக்கை விடுத்து பேசினார்.
கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு நேற்று இறுதிகட்ட பிரசாரத்தில் பொதுமக்களிடம் ஆதரவு திரட்டி பேசியதாவது;
தேர்தலின் போது பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வரும் தி.மு.க.,வுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும். போதை பொருட்கள் புழக்கம் அதிகரிப்பால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை என மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தோம். பொதுமக்கள் சிந்தித்து தேர்தலில் ஓட்டளிக்க வேண்டும். மேலும், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினருக்கு தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் முன்னாள் அமைச்சர் மோகன், எம்.எல்.ஏ., செந்தில்குமார், முன்னாள் எம்.பி., காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அழகுவேல்பாபு, பிரபு, ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல், மாவட்ட அவை தலைவர் பச்சையாப்பிள்ளை, ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன், அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, அருணகிரி, கதிர்.தண்டபாணி,துரைராஜ், ராஜேந்திரன், அய்யம்பெருமாள், பாசறை செயலாளர் வினோத், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தங்கபாண்டியன், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்பாஷா, அண்ணா தொழிற்சங்க செயலாளர் அய்யாக்கண்ணு, நகர செயலாளர்கள் பாபு, ஷியாம்சுந்தர், ராகேஷ், தே.மு.தி.க., மாவட்ட செயலார் கருணாகரன், ஒன்றிய செயலாளர் நல்லதம்பி உட்பட அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர்.