/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம்
/
எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம்
ADDED : செப் 05, 2024 06:52 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்வு கூட்டத்தில், 36 மனுக்கள் பெறப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கையில் திருப்தி பெறாத புகார்தாரர்களுக்கான குறை தீர்வு கூட்டம் நேற்று நடந்தது.
கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு எஸ்.பி., ரஜத் சதுர்வேதி தாலைமை தாங்கி, மனுக்களை பெற்றார்.
அதில் பெறப்பட்ட 36 மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
கூட்டத்தில் டி.எஸ்.பி., தேவராஜ், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.