/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெருமாள் கோவில் ஏகாதசி உற்சவம்
/
பெருமாள் கோவில் ஏகாதசி உற்சவம்
ADDED : ஜூலை 18, 2024 05:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில், ஏகாதசி உற்சவம் நடந்தது.
கள்ளக்குறிச்சி புண்டரீவல்லி தாயார் சமேத கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி உற்சவம் நேற்று மாலை நடந்தது. அதனையொட்டி, உற்சவர் பெருமாளுக்கு மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட 16 வகை மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, கலசாபிஷேகமும் செய்து வைத்தனர்.
திவ்ய அலங்காரத்துக்குப்பின் பெருமாள் மண்டபத்தில் எழுந்தருள செய்து, சேவை, சாற்றுமுறை, சோடச உபசாரம், அலங்கார தீபங்களுடன் பூஜைகள் நடத்தப்பட்டது.
தேசிக பட்டர் பூஜைகளை செய்து வைத்தார். திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.