/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெருமாள் கோவில் திருக்கல்யாண உற்சவம்
/
பெருமாள் கோவில் திருக்கல்யாண உற்சவம்
ADDED : ஏப் 23, 2024 06:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் பெருமாள், தாயார் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் கடந்த 7 நாட்களாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெருமாள் தாயார் திருக்கல்யாணம் நடந்தது.
விஸ்வக்சேனர் வழிபாடு, புண்ணியாவஜனம், முளைப்பாரி இடுதல், காப்புகட்டுதல், மாலை மாற்றுதல் நடந்தது. யாகம் முடிந்து பெருமாள், தாயார் திருக்கல்யாணம் நடந்தது.
இன்று திருத்தேர் உற்சவம் காலை 6:00 மணிக்கு துவங்குகிறது. வைபவங்களை தேசிக பட்டர் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.

