/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புகைப்பட, வீடியோ கலைஞர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்
/
புகைப்பட, வீடியோ கலைஞர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்
புகைப்பட, வீடியோ கலைஞர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்
புகைப்பட, வீடியோ கலைஞர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்
ADDED : ஆக 12, 2024 06:42 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் புகைப்பட, வீடியோ ஒளிப்பதிவாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ஜெயகோபி தலைமை தாங்கினார். பொருளாளர் கிருஷ்ணகுமார், அமைப்பாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். செயலாளர் சீனிவாசன் வரவேற்றார்.
தமிழ்நாடு வீடியோ, போட்டோகிராபர்ஸ் அசோசியேஷன் மாநிலத் தலைவர் சிவக்குமார், கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகளுக்கு பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.
பொதுச் செயலாளர் ஸ்ரீதரன், பொருளாளர் சுரேஷ், அமைப்பாளர் சரவணன், துணைத் தலைவர்கள் அசோக், பொன்னுசாமி, இணைச் செயலாளர்கள் மூர்த்தி, ஸ்ரீராம் கண்ணன், மாநில பிரதிநிதிகள் சிவக்குமார், சக்கரவர்த்தி, பாலசந்தர் மண்டல செயலாளர் மைலாப்பூரான், மாவட்ட துணை தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், புகைப்பட, வீடியோ கலைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் தமிழக அரசு, தனி நல வாரியம் அமைக்க வேண்டும். சங்க உறுப்பினர்களை அதிகளவில் கூட்ட வேண்டும். வட்ட சங்க பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து மாவட்ட சங்கம் செயல்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.