/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மனநிலை பாதித்தவர் சிகிச்சைக்கு பின் பெற்றோரிடம் ஒப்படைத்த போலீஸ்
/
மனநிலை பாதித்தவர் சிகிச்சைக்கு பின் பெற்றோரிடம் ஒப்படைத்த போலீஸ்
மனநிலை பாதித்தவர் சிகிச்சைக்கு பின் பெற்றோரிடம் ஒப்படைத்த போலீஸ்
மனநிலை பாதித்தவர் சிகிச்சைக்கு பின் பெற்றோரிடம் ஒப்படைத்த போலீஸ்
ADDED : மே 06, 2024 03:46 AM
உளுந்துார்பேட்டை, : உளுந்துார்பேட்டையில் மனநிலை பாதிக்கப்பட்டவரை மீட்டு 4 மாதம் சிகிச்சைக்கு பிறகு அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
உளுந்துார்பேட்டை போலீஸ் குடியிருப்பு வளாகப் பகுதியில் மனநலகம் பாதிக்கப்பட்டு கார்த்திக் என்பவர் சுற்றி வந்தார்.
இதனை அறிந்த உளுந்துார்பேட்டை பெண் போலீசான மேகவள்ளி, ராஜலட்சுமி ஆகியோர் கார்த்திக்கை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஆதரவற்றோர் மனநல பிரிவில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு 4 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். பின் கார்த்திக்கிடம் விசாரித்து முகவரி அறிந்தனர். அவர், சென்னை, புரசைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அதன் பேரில் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து கார்த்திக்கை ஒப்படைத்தனர்.
போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு கார்த்திக்கின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.