ADDED : ஜூன் 25, 2024 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே காணாமல் போன 2 பெண்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த வாணியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியராஜ் மனைவி கீதா, 29; இவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 21ம் தேதி கீதா மொபைல் போனில் அடிக்கடி பேசிக்கொண்டிருந்தார். இதனை சத்தியராஜ் கண்டித்தார்.
இந்நிலையில் கீதா மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த அவரது தோழியான ரமேஷ் மகள் தர்ஷினி ஆகிய இருவரும் வீட்டிலிருந்து மாயமாகினர். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
சத்தியராஜ் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.