/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
15 ஆண்டுகளாக செயல்படாத பிரேத பரிசோதனைக்கூடம்
/
15 ஆண்டுகளாக செயல்படாத பிரேத பரிசோதனைக்கூடம்
ADDED : பிப் 27, 2025 07:47 AM
சங்கராபுரம்; சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் கடந்த, 15 ஆண்டுகளாக பிரேத பரிசோதனைக்கூடம் இயங்காததால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சங்கராபுரம் பஸ் நிலையம் அருகில் அரசு மருத்துவமனை உள்ளது.
இது, கடந்த 2010,ம் ஆண்டு வரை ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்து, பின் அரசு மருத்துவமனையாக மாற்றப்பட்டது.
ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்த போது, அங்கு பிரேத பரிசோதனைக்கூடம் இயங்கியது. ஆனால் தரம் உயர்த்தப்பட்ட பின், போதிய டாக்டர்கள் இல்லாததால், அந்த பரிசோதனைக்கூடம் செயல்படவில்லை.
இதையடுத்து, இறப்பவர்களின் சடலங்கள் கடந்த பல ஆண்டுகளாக பிரேத பரிசோதனைக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'இந்த பிரச்னையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
அதிகாரிகளிடம் பல தடவை முறையிட்டும், இதுவரை எந்த பலனும் இல்லை. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,'என்றனர்.

