/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்க கூட்டு நடவடிக்கை குழு கூட்டம்
/
தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்க கூட்டு நடவடிக்கை குழு கூட்டம்
தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்க கூட்டு நடவடிக்கை குழு கூட்டம்
தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்க கூட்டு நடவடிக்கை குழு கூட்டம்
ADDED : ஜூலை 22, 2024 07:49 PM

கள்ளக்குறிச்சி : தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆயத்த கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்தது.
கூட்டத்திற்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் அண்ணாமலை, செயலாளர்கள் ேஷக்ஜாகீர்உசேன், செல்வராசு முன்னிலை வகித்தனர். தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் லட்சுமிபதி, தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் கலைச்செல்வி ஆகியோர் போராட்ட விளக்கவுரையாற்றினர்.
கூட்டத்தில், தொடக்கக் கல்வி ஆசிரியர் இனத்தை அழிக்கும் அரசாணை 243ஐ திரும்பப் பெற வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வரும் 29ம் தேதி முதல் 3 நாட்கள் நடக்கும் தொடர் முற்றுகை போராட்டத்தில் திரளாக பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் லாரன்ஸ், சவரிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.