/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தனியார் இல்லம், விடுதிக்கு உரிமம் பெற வேண்டும்: கலெக்டர் பிரசாந்த் அறிவிப்பு
/
தனியார் இல்லம், விடுதிக்கு உரிமம் பெற வேண்டும்: கலெக்டர் பிரசாந்த் அறிவிப்பு
தனியார் இல்லம், விடுதிக்கு உரிமம் பெற வேண்டும்: கலெக்டர் பிரசாந்த் அறிவிப்பு
தனியார் இல்லம், விடுதிக்கு உரிமம் பெற வேண்டும்: கலெக்டர் பிரசாந்த் அறிவிப்பு
ADDED : ஜூலை 04, 2024 11:33 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் இல்லங்கள், விடுதிகளுக்கு பதிவு செய்தல் மற்றும் உரிமம் பெற வேண்டும் என்று கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திகுறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியாரால் நடத்தப்படும் சிறார் மற்றும் மகளிருக்கான இல்லங்கள், விடுதிகள் பதிவு செய்தல், உரிமம் பெறும் முறை ஆகியவற்றிற்கு அரசு நிபந்தனை விதித்துள்ளது.
அதில் தீயணைப்பு, சுகாதார சான்றிதழ், கட்டட உறுதித்தன்மை சான்று ஆகியவை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்டடத்தில் விடுதி நடத்தப்பட வேண்டும்.
மேலும் விடுதியின் குளியலறை மற்றும் உடை மாற்றும் அறைகளைத் தவிர்த்து மற்ற பகுதியில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.
பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விடுதி காப்பகங்களில் விடுதி காப்பாளர் பெண்ணாகவும், விடுதி பாதுகாவலர் ஆண் அல்லது பெண்ணாக இருக்க வேண்டும்.
மேலும் விடுதி மேலாளர், காப்பாளர், பாதுகாவலர் ஆகியோர் காவல் துறையில் நன்னடத்தை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். விடுதியில் சேர்க்கை பதிவேடு, நடமாடும் பதிவேடு, விடுப்பு விடுமுறை பதிவேடு மற்றும் பார்வையாளர் பதிவேடு ஆகியவை முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.
அதேபோல் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை தனியார் கல்லுாரி மற்றும் பள்ளி விடுதியில் சேர்ப்பதற்கு முன் அரசு அனுமதி பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
பதிவு செய்தல் மற்றும் உரிமம் பெறுவதற்கான படிவங்களை https://kallakurichi.nic.in பதிவிறக்கம் செய்து கொண்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகுமாறு தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.