/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வளரச்சி திட்ட பணிகள்: திட்ட இயக்குனர் ஆய்வு
/
வளரச்சி திட்ட பணிகள்: திட்ட இயக்குனர் ஆய்வு
ADDED : ஜூலை 23, 2024 10:52 PM

சங்கராபுரம்: சங்கராபுரம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியத்தில் முரார்பாளையம், மேலப்பட்டு, , நெடுமானுார்,பூட்டை ஆகிய கிராமங்களில் நடந்து வரும் கலைஞர் கனவு இல்ல பணிகள், பழுதடைந்த வீடுகள் புணரமைப்பு பணி, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் மற்றும் பொய்குணம் கிராமத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக குளம் வெட்டும் பணி உள்ளிட்ட பணிகளை மாவட்ட திட்ட இயக்குனர் தனபதி ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது பி.டி.ஓ.,க்கள் மோகன்குமார், செல்சவபோதகர், ஒன்றிய பொறியாளர் ராஜகோபால், கோமதி, அரிகிருஷ்ணன், மற்றும் பணி மேற்பார்வையாளர்கள் உடனிருந்தனர்.