/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பொது விநியோக திட்ட குறைகேட்பு முகாம்
/
பொது விநியோக திட்ட குறைகேட்பு முகாம்
ADDED : ஆக 12, 2024 06:33 AM
ரிஷிவந்தியம்: வாணாபுரத்தில் நடந்த பொது விநியோக திட்ட குறைகேட்பு முகாமில் 65 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் நடந்த முகாமிற்கு, குடிமைப்பொருள் தாசில்தார் மணிமாறன் தலைமை தாங்கினார். முகாமில், ரேஷன் கார்டு நகல் தொடர்பாக 1 மனு, முகவரி மாற்றம் 1, தொலைபேசி எண் மாற்றம் 20, குடும்ப உறுப்பினர் நீக்கம் 14, புதிய உறுப்பினர் சேர்க்கை 15 மற்றும் புகைப்படம் மாற்றம் மற்றும் பெயர் திருத்தம் தொடர்பாக மொத்தமாக 65 மனுக்கள் பெறப்பட்டு, அனைத்து மனுக்களுக்கும் உடனடி தீர்வு காணப்பட்டது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு, குடிமைப் பொருள் தனி தாசில்தார் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி, மனுக்களை பெற்றார். முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் 14 மனுக்கள், மொபைல் எண் மாற்ற 23, பெயர் திருத்தம் 2 என மொத்தம் 39 மனுக்கள் பெறப்பட்டு அனைத்தும் உடனடியாக தீர்வு காணப்பட்டது.

