/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மழைமானி இயந்திரம் பழுது; சீர் செய்ய நடவடிக்கை தேவை
/
மழைமானி இயந்திரம் பழுது; சீர் செய்ய நடவடிக்கை தேவை
மழைமானி இயந்திரம் பழுது; சீர் செய்ய நடவடிக்கை தேவை
மழைமானி இயந்திரம் பழுது; சீர் செய்ய நடவடிக்கை தேவை
ADDED : செப் 05, 2024 06:50 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேதமடைந்த, பணிபுரியாத நிலையில் உள்ள மழைமானிகளை சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை துல்லியமாக கணிக்கிட பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மழைமானிகள் பொருத்தப்பட்டுள்ளன.
அதன்படி, கள்ளக்குறிச்சி தாலுகாவில் -3, சின்னசேலம் மற்றும் சங்கராபுரம் தாலுகா பகுதிகளில் தலா 2, வாணாபுரம் -10, திருக்கோவிலுார் -4, உளுந்துார்பேட்டை -3 என மொத்தமாக 24 இடங்களில் மழை மானி கருவி பொருத்தப்பட்டுள்ளது.
திறந்தவெளியில் உள்ள மழைமானியில் சேகரமாகும் தண்ணீரை பொருத்து, மி.மீ., அளவில் எவ்வளவு மழை பெய்துள்ளது என கணக்கெடுக்கப்படும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதில், சூளாங்குறிச்சி மற்றும் மாடாம்பூண்டியில் உள்ள மழைமானி பழுதாகி உள்ளது.
இதனால் மாவட்டம் முழுவதும் பெய்யும் மழையின் அளவை முறையாக கணக்கீடு செய்ய முடியவில்லை. எனவே, வடகிழக்கு பருவமழை பெய்யும் முன் பழுதாகி உள்ள மழைமானி கருவிகளை சரிசெய்வதுடன், முறையாக பராமரித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.