sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ரம்ஜான் சிறப்பு தொழுகை

/

ரம்ஜான் சிறப்பு தொழுகை

ரம்ஜான் சிறப்பு தொழுகை

ரம்ஜான் சிறப்பு தொழுகை


ADDED : ஏப் 11, 2024 11:43 PM

Google News

ADDED : ஏப் 11, 2024 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : ரம்ஜான் பண்டிகையொட்டி, கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே உள்ள ஈத்தா மைதானத்தில் நேற்று காலை சிறப்பு தொழுகை நடந்தது.

முன்னதாக நான்கு முனை சந்திப்பு அருகே உள்ள ஜிம்மா பள்ளி வாசலில் இருந்து கடை வீதி வழியாக முஸ்லிம்கள் ஊர்வலமாக சென்று ஈத்கா மைதானத்தை அடைந்தனர். தொடர்ந்து அனைத்து பள்ளி ஜாமாத்தார்கள் முன்னிலையில் சிறப்பு தொழுகை நடந்தது. நடுத்தக்கா, அண்ணா நகர், காட்டுபுரித்தக்கா, கோட்டைமேடு, ஏ.கே.டி.,நகர், வ.உ.சி., நகர், கரியப்பா நகர் ஆகிய பள்ளி வாசல்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் திரளாக பங்கேற்றனர். ஒருவரையொருவர் கட்டி தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

சின்னசேலம்


மூங்கில்பாடி சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. அம்சாகுளம் பள்ளி வாசல், நடுபள்ளி பள்ளி வாசல், அண்ணா நகர் பள்ளிவாசல், கிழக்கு பள்ளிவாசல் சேர்ந்த ஏராளமானோர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

சங்கராபுரம்


சங்கராபுரம் பூட்டை ரோடில் உள்ள ஈக்தா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. முத்தவல்லிகள் ஹாகுல், ஹாஜகான், ஜம்ஷித், லியாகத், யாசின், ஆசாத்அலி, மக்புல் ஆகியோர் முன்னிலையில் நடந்த சிறப்பு தொழுகையில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

திருக்கோவிலுார்


திருக்கோவிலுார், சந்தப்பேட்டை, ஈத்கா மைதானத்தில் நேற்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. முகமது ஜாபர் மவுலானா தலைமை தாங்கி ரமலான் சிறப்பு பிரசங்கம் செய்தார். ஏராளமான முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us