/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ராமானுஜர், நம்மாழ்வார் வீதியுலா உற்சவம்
/
ராமானுஜர், நம்மாழ்வார் வீதியுலா உற்சவம்
ADDED : மே 24, 2024 06:09 AM

கள்ளக்குறிச்சி: மோ.வன்னஞ்சூர் ராமானுஜ பஜனை மடம் சார்பில், ராமானுஜர், நம்மாழ்வார் திருவீதியுலா உற்சவம் நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த மோ.வன்னஞ்சூர் ராமானுஜ பஜனை மடத்தில் வைணவ ஆழ்வார்களான ராமானுஜர் மற்றும் நம்மாழ்வார் வைபவம் உள்ளிட்ட இருபெரும் விழா நடந்தது. கடந்த 21ம் தேதி கருடக்கொடியேற்றத்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் சகல கார்ய சித்தி நவவித ஹோமம், திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து 2ம் நாள் அகண்ட பஜனை, திருமஞ்சனமும், வைணவ உரையரங்கமும் நடந்தது.
மூன்றாம் நாளான நேற்று நம்மாழ்வார், ராமானுஜர் சுவாமிகளுக்கு பாசுரங்கள் பாராயணம் செய்து, சர்வ அலங்காரத்தில் திருவீதியுலா உற்சவம் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.