/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நாளை ரேஷன் கார்டு குறைதீர் சிறப்பு முகாம்
/
நாளை ரேஷன் கார்டு குறைதீர் சிறப்பு முகாம்
ADDED : செப் 13, 2024 07:50 AM
ரிஷிவந்தியம்: வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் ரேஷன் கார்டு குறைதீர் சிறப்பு முகாம் நாளை(14ம் தேதி) நடக்கிறது.
வாணாபும் தாலுகா அலுவலக செய்திக்குறிப்பு: வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு குறைதீர் சிறப்பு முகாம் நாளை (14ம் தேதி) நடக்கிறது.
காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெறும் இம்முகாமில் மின்னணு ரேஷன் கார்டில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், உறுப்பினர் சேர்த்தல், செல்போன் எண் மாற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, வாணாபுரம் தாலுகாவிற்குட்பட்ட பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்று பயனடையவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உளுந்துார்பேட்டை
உளுந்துார்பேட்டை வட்ட வழங்கல் அலுவலகத்தில் நாளை சிறப்பு குறை தீர்வு முகாம் நடக்கிறது.
பொதுவிநியோ திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை தோறும் மின்னணு ரேஷன் கார்டுகளுக்கான சிறப்புக் குறைதீர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மின்னணு குடும்ப அட்டைகளுக்கான சிறப்பு குறை தீர்வு முகாம் உளுந்தூர்பேட்டை வட்ட வழங்கல் அலுவலகத்தில் நாளை ( 14ம் தேதி) நடக்கிறது.
நாளை காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடக்கும் இந்த முகாமில் உளுந்துார்பேட்டை தாலுகாவை சேர்ந்தவர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புகைப்பட மாற்றம், தொலைபேசி இணைப்பு போன்ற சேவைகளை முகாமில் கலந்து கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம் என வட்ட வழங்கல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.