/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
100 நாள் வேலை வழங்க மறுப்பு; கலெக்டர் அலுவலகத்தில் மனு
/
100 நாள் வேலை வழங்க மறுப்பு; கலெக்டர் அலுவலகத்தில் மனு
100 நாள் வேலை வழங்க மறுப்பு; கலெக்டர் அலுவலகத்தில் மனு
100 நாள் வேலை வழங்க மறுப்பு; கலெக்டர் அலுவலகத்தில் மனு
ADDED : ஆக 02, 2024 11:30 PM

கள்ளக்குறிச்சி : ஜா.சித்தாமூரில் ஆதிதிராவிடர்களுக்கு 100 நாள் வேலை வழங்க மறுப்பதை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.
மனு விபரம்:
திருக்கோவிலுார் அடுத்த ஜா.சித்தாமூர் காலனி பகுதி மக்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்கக் கூடாது என ஊர் பகுதி மக்கள் கூறி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து திருக்கோவிலுார் பி.டி.ஓ., கொளஞ்சிவேலு, ஜா.சித்தாமூரை சேர்ந்த காலனி மக்களுக்கு 100 நாள் வேலை நிறுத்தப்பட்டுள்ளது என கூறி வேலை வழங்க மறுக்கிறார்.
ஆனால் ஜா.சித்தாமூர் மதுரா பிள்ளையார்பாளையம் பகுதி மக்களுக்கு 100 நாள் வேலையை, எவ்வித ஆய்வும் செய்யாமல் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
பி.டி.ஓ., மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை ஆதிதிராவிட மக்கள் பாதிக்காத வகையில் 100 நாள் வேலையை வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.