/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வட்டார விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
/
வட்டார விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : செப் 05, 2024 09:53 PM

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலுார் வட்டாரத்தில் வேளாண் துறை அட்மா திட்டத்தின்கீழ் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு அட்மா திட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். வட்டார ஒன்றிய பெருங்குழு தலைவர் அஞ்சலையாட்சி அரசகுமார், துணை தலைவர் தனம் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக்கோவிலுார் வட்டார வேளாண்மை உதவியாளர் கிருஷ்ணகுமாரி வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அய்யனார், கிருஷ்ணமூர்த்தி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.
துணை வேளாண் அலுவலர் மொட்டையாப்பிள்ளை வேளாண் துறையில் உள்ள கிராம வேளாண் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம், முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், தமிழ் மண்வளம், ஒருங்கிணைந்த பண்ணையம், உழவன் செயலி உள்ளிட்ட அனைத்து திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் மணிமேகலை, அட்மா திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விவசாயிகளிடம் பேசினார். உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பிரகலாதன், செல்லன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.