/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரிஷிவந்தியம் அரசு கலை கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
/
ரிஷிவந்தியம் அரசு கலை கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
ரிஷிவந்தியம் அரசு கலை கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
ரிஷிவந்தியம் அரசு கலை கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
ADDED : ஜூலை 13, 2024 06:18 AM

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முன்பு, தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாணாபுரம் அடுத்த அரியலுாரில் தற்காலிகமாக ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இயங்கி வருகிறது. இக்கல்லுாரியில் தற்காலிகமாக பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மதியம் 1.30 மணியளவில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முகேஷ் தலைமை தாங்கினார். குணசேகரன், ஜெகநாதன், முருகசாமி, சந்திரலேகா முன்னிலை வகித்தனர். பணி நிரந்தரம் செய்தல், யு.ஜி.சி., நிர்ணயித்த ஊதியம் வழங்குதல், பணிப்பாதுகாப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டவாறு போராட்டம் நடந்தது.
இதில் கவுரவ விரிவுரையாளர்கள் நிஷா, தாரண்யா, சிலம்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.