/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆன்லைனில் ரூ.1.87 லட்சம் மோசடி; சைபர் கிரைம் போலீசார் விசாரணை
/
ஆன்லைனில் ரூ.1.87 லட்சம் மோசடி; சைபர் கிரைம் போலீசார் விசாரணை
ஆன்லைனில் ரூ.1.87 லட்சம் மோசடி; சைபர் கிரைம் போலீசார் விசாரணை
ஆன்லைனில் ரூ.1.87 லட்சம் மோசடி; சைபர் கிரைம் போலீசார் விசாரணை
ADDED : அக் 26, 2024 07:48 AM
கள்ளக்குறிச்சி : ஆன்லைன் டிரேடிங்கில் அதிக லாபம் பெற்று தருவதாக வாலிபரிடம் ஒரு லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வுருகின்றனர்.
பகண்டை கூட்ரோடு அடுத்த மெய்யனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மகன் ராஜேஷ், 34; இவர் டிரேடிங்கில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிப்பது தொடர்பாக யூ டிபில் சில வீடியோக்களை பார்த்துள்ளார்.
அப்போது வந்த லிங்க்குகளை கிளிக் செய்து தனது விவரங்களை உள்ளீடு டிரேடிங் செய்துள்ளார். அதில் அவருக்கு 500 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
பின் அவரது மொபைல் போனுக்கு பல்வேறு எண்களிலிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் டிரேடிங் கம்பெனிகளில் இருந்து பேசுவதாகவும், பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்று தருவாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி ராஜேைஷ டிரேடிங்கில் பணம் முதலீடு செய்ய வைத்து நஷ்டம் ஏற்படுத்தியது மட்டுமின்றி கமிஷன் என்ற பெயரில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 700 ரூபாயை ஏமாற்றியுள்ளனர்.
இது குறித்து ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் போலீசார் கடந்த 23ம் தேதி வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.