/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.1.66 லட்சம் பறிமுதல்
/
ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.1.66 லட்சம் பறிமுதல்
ADDED : ஏப் 05, 2024 11:58 PM

கள்ளக்குறிச்சி: கூத்தக்குடியில் ஆவணமின்றி உளுந்து வியாபாரி எடுத்துச் சென்ற 1 லட்சத்து 66 ஆயிரத்து 700 ரூபாயை நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி துணை பி.டி.ஓ., சீனிவாசன் தலைமையிலான நிலை கண்காணிப்பு குழுவினர், கூத்தக்குடி சோதனைச் சாவடியில் நேற்று காலை 7:55 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வேப்பூர் நோக்கிச் சென்ற மினி சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், உளுந்துார்பேட்டை அடுத்த உளுந்தாண்டவர்கோவிலைச் சேர்ந்த செல்வம், 37; என்பவர் 1 லட்சத்து 66 ஆயிரத்து 700 ரூபாய் எடுத்துச் சென்றது தெரிந்தது.
விசாரணையில் உளுந்து வியாபாரி எனவும், உளுந்து மூட்டைகளை வாங்குவதற்காக வட்டிக்கு பணம் வாங்கி எடுத்து செல்வதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும் உரிய ஆவணம் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்து, கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., உதவியாளர் நடராஜனிடம் ஒப்படைத்தனர்.
திருக்கோவிலுார்
திருக்கோவிலுார் அருகே முகையூர் - இருதயபுரம் சாலையில் நிலை கண்காணிப்புக்குழு அலுவலர் மீனா தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்ததில், உரிய ஆவணங்கள் இன்றி ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 900 ரூபாய் கொண்டு வரப்பட்டது தெரிந்தது.
அதனைத் தொடர்ந்த பணத்தை பறிமுதல் செய்து, திருக்கோவிலுார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மாரியா பிள்ளையிடம் ஒப்படைத்தனர்.

