ADDED : மார் 03, 2025 07:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுாார்: திருக்கோவிலுார், வடக்கு வீதி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நுாற்றாண்டு விழா நடந்தது.
நகரமன்ற தலைவர் முருகன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் முரளி கிருஷ்ணன், கஜேந்திரன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் சந்தியாகு சிங்கராயன் முன்னிலை வகித்தனர்.
தலைமை ஆசிரியர் நெடுஞ்செழியன் வரவேற்றார்.
நகராட்சி துணைச் சேர்மன் உமா மகேஸ்வரி, நகர மன்ற உறுப்பினர்கள் புவனேஸ்வரி, துரைராஜன், பள்ளியின், 100 ஆண்டு கால சிறப்புகள் குறித்து விளக்கமாக பேசினர்.
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பிரபாகரன், ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் வாசன் வாழ்த்தி பேசினர்.
தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சியும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
ஆசிரியர் நாகமணி நன்றி கூறினார்.