/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைக்கு பாதுகாப்பு
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைக்கு பாதுகாப்பு
ADDED : ஏப் 10, 2024 02:07 AM

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறைக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில், கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்டங்களை சேர்ந்த 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில், ரிஷிவந்தியம்-305 ஓட்டுச்சாவடி மையங்கள், சங்கராபுரம்-300, கள்ளக்குறிச்சி-332, கங்கைவல்லி-264, ஆத்துார்-284, ஏற்காடு-318 என மொத்தமாக 1,803 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன.
தேர்தலையொட்டி கள்ளக்குறிச்சியில் இருந்து அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட், வி.வி.பாட்., உள்ளிட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், மை, மறைவு பெட்டி, சீட்டு உள்ளிட்ட உபகரண பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டன.
இதில், கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதிக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டு, பூட்டு போடப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டு, பாதுகாப்பு பணிக்காக சுழற்சி அடிப்படையில் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அதேபோல், ரிஷிவந்தியம் தொகுதிக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அரியலுார் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், சங்கராபுரம் தொகுதிக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியிலும் வைக்கப்பட்டுள்ளது.

