
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரி மற்றும் நேரு யுவகேந்திரா சார்பில், மரம் வளர்த்தல் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார்.
மாவட்ட இளையோர் மன்ற அலுவலர் ராம்சந்திரன் முன்னிலை வகித்தார். நேரு யுவகேந்திரா மாவட்ட அலுவலர் சக்திவேல் வரவேற்றார். அரசு டாக்டர் ஆண்டவர் வாழ்த்தி பேசினார். ஒருங்கிணைப்பாளர் ராஜன், போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மரம் வளர்ப்பது குறித்து பேசினார். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ராஜா, ேஹமலதா செய்தனர். துணை முதல்வர் ஜான்விக்டர் நன்றி கூறினார்.