/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஜவுளித்துறை பிரிவுகளில் திறன் பயிற்சி
/
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஜவுளித்துறை பிரிவுகளில் திறன் பயிற்சி
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஜவுளித்துறை பிரிவுகளில் திறன் பயிற்சி
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஜவுளித்துறை பிரிவுகளில் திறன் பயிற்சி
ADDED : செப் 05, 2024 06:50 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஏழை எளிய வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் ஜவுளித்துறை பிரிவுகளில் திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் கோயம்பத்துார் தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம் இணைந்து ஜவுளித்துறை பிரிவுகளில் திறன் பயிற்சி குறுகிய கால திறன் பயிற்சி அளிக்கிறது.
இத்திட்டத்தின்கீழ் ஜவுளித்தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு டெக்ஸ்டைல் வேல்யூ செயின் எனும் நுாற்பு , நெசவு, பின்னல் மற்றும் டெக்னிக்கல் டெக்ஸ்டைல் போன்ற பல்வேறு பிரிவுகளில் திறன் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இதன் ஒரு பகுதியாக TNSDC மற்றும் SITRA மூலம் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு நுாற்பு மற்றும் தொழில்நுட்ப ஜவுளித்துறை தொடர்பாக திறன் பயிற்சி அளிக்க பிரத்யேக இணையத்தளம் https://tntextiles.tn.gov.in/jobs/ உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சார்ந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இணையத்தளத்தில் தங்கள் விவரத்தை பதிவு செய்து நுாற்பு மற்றும் தொழில்நுட்ப ஜவுளித்துறையில் வேலைவாய்ப்பு பெற்று தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டுமென கலெக்டர் தெரிவித்துள்ளார்.