/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு ஆண்கள் பள்ளியில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
/
அரசு ஆண்கள் பள்ளியில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
அரசு ஆண்கள் பள்ளியில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
அரசு ஆண்கள் பள்ளியில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
ADDED : செப் 17, 2024 06:06 AM

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சி.இ.ஓ., கார்த்திகா தலைமையில், டி.இ.ஓ., ரேணுகோபால் முன்னிலையில் முதன்மை சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதில் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுடன் இணைந்து சமத்துவ நாள் உறுதிமொழியினை சி.இ.ஓ., கார்த்திகா ஏற்றுக் கொண்டார்.
பள்ளியில் சத்துணவு தயாரிப்பு பணிகளை ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்.
மாணவர்களின் வருகை அதிகரிக்க செய்வதால் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும். அனைத்து வளர்ச்சிகளையும் உள்ளடக்கிய மேம்பாட்டிற்கு ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பள்ளி வளாகம், வகுப்பறைகளை பார்வையிட்ட சி.இ.ஓ., ஐந்து வகுப்புகளுக்கு கற்பித்தல் பணிகளுக்கு ஏதுவாக மாற்றம் செய்ய அறிவுறுத்தினார்.
மேலும் பள்ளியில் வகுப்பறைகள் இல்லாத மாணவர்களுக்கு தேவையான வகுப்பறைகளை ஏற்பாடு செய்வதற்கான வழிமுறைகளை தலைமை ஆசிரியர் கலாபனுக்கு ஆலோசனை கூறினார்.

